Published : 25 Sep 2020 06:59 AM
Last Updated : 25 Sep 2020 06:59 AM

கோயம்பேடு சந்தை வியாபாரிகள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்: சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அறிவுறுத்தல்

கோயம்பேடு காய்கறி சந்தை 28-ம்தேதி திறக்கப்படவுள்ள நிலையில் வியாபாரிகள், தொழிலாளர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சிஎம்டிஏஉறுப்பினர் செயலர் தா.கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.

கோயம்பேடு காய்கறி சந்தை 28-ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு பல கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதை சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் தா.கார்த்திகேயன் நேற்று நேரில் ஆய்வுசெய்தார். அப்போது, “சந்தைதிறப்புக்கு 2 நாட்கள் முன்பாக வியாபாரிகள், கடை பணியாளர்கள், தொழிலாளர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

முன்னதாக சந்தை திறப்புதொடர்பாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் தா.கார்த்திகேயன் தலைமையில் வியாபாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் எழும்பூரில் நடைபெற்றது. அதில் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

சந்தைக்குள் ஆட்டோ, இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. சில்லறை வணிகம் தடைசெய்யப்பட்டுள்ளது. அனைத்து கடைகளிலும் முகக்கவசம், உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி, பல்ஸ் ஆக்சிமீட்டர், கிருமி நாசினியை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தொழிலாளர்களை அடையாளம் காண, நிர்வாகத்தால் வழங்கப்படும் பின்னலாடை உடுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சாலையோர விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

சரக்கு வாகனங்கள் இரவு 9மணி முதல் அதிகாலை 5 மணிவரை அனுமதிக்கப்படும். வாடிக்கையாளரின் வாகனங்கள் அதிகாலை முதல் காலை 9 மணி வரைஅனுமதிக்கப்படும். வியாபாரிகளை முறைப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சந்தை முழுவதும் சிசிடிவிகேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சந்தைக்கு விடுமுறை விடப்பட்டு, தூய்மைமற்றும் பராமரிப்பு பணிகள்மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x