

கோயில்கள் தொடர்பான எல்லா விவரங்களையும் ஆன்லைனில் செப்.25-ம் தேதிக்குள் (இன்று)பதிவேற்றம் செய்யுமாறு இந்துசமயஅறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இந்து சமயஅறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 44,120 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக பல லட்சக்கணக்கான ஏக்கர்நிலங்கள் உள்ளன. இவற்றில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். மேலும், கோயில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியது:
கோயிலுக்குச் சொந்தமான நிலம், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலம், சிலைகள், நகைகள்,கோயில் அருகில் உள்ள பேருந்து, ரயில் நிலையம் உள்ளிட்ட எல்லா விவரங்களையும் தொகுத்து செப்.25-க்குள் (இன்று) ஆன்லைனில்பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள் ளது. இந்த விவரங்கள் பக்தர்களின் பார்வைக்காக இந்து சமயஅற நிலையத் துறையின் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். விவரங்களை பதிவேற்றம் செய்யாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.