

ஸ்ரீவைகுண்டம் அணை தூர் வாரும் பணிகளில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங் கிணைப்பாளர் சுப.உதய குமார் உள்ளிட்ட 178 பேர் கைது செய்யப் பட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் அணை தூர் வாரும் பணிகளை அணைப் பகுதியிலிருந்து தொடங்க வேண் டும் என்கிற கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி ஸ்ரீவைகுண்டம் அணை தூர் வாரும் மேம்பாட்டுக் குழு சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இருப்பினும் இவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படா ததால், நேற்று தூர்வாரும் பணி நடைபெறும் பகுதியை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட் டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு தலைமை வகித்தார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதி வியாபாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அனைத்து வியாபாரி களும் கடையடைப்பு செய்து முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர். போலீஸாருக்கும், போராட்டக் குழுவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அணையின் உள்ளே சென்ற போராட்டக் குழுவினர் அங்கி ருந்த மரத்தடியில் அமர்ந்து உள்ளி ருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
மாலையில் 4.30 மணி அளவில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், அணையின் முதல் பிரிவில் நாளை (இன்று) முதல் தூர்வாரும் பணி முழு வீச்சில் நடைபெறும் என எழுத்து பூர்வமாக உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. எனினும், போராட்டக் குழுவினரில் நல்ல கண்ணு, சீமான் உள்ளிட்ட 178 பேரை போலீஸார் கைது செய்து இரவில் விடுவித்தனர்.