கரும்புக்கு அரசு நிர்ணயித்த விலை கிடைக்க அரசு நடவடிக்கை

கரும்புக்கு அரசு நிர்ணயித்த விலை கிடைக்க அரசு நடவடிக்கை
Updated on
1 min read

கரும்புக்கு அரசு நிர்ணயித்த விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பாமக உறுப்பினர் அ.கணேஷ்குமார் பேசியதாவது:

சில தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்புக்கு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.1,800 மட்டுமே வழங்க முடியும் என கூறுகின்றன. இது பிரச்சினையானதும் முதல் தவணையாக ரூ.1,800-ம், மீதமுள்ள தொகை 2-வது தவணையாக வழங்கப்படும் என அறிவித்துள் ளன. தனியார் ஆலைகள் அரசு நிர்ணயித்த ரூ.2,650 வழங்குவ தில்லை. அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி டன்னுக்கு ரூ.3,000 எப்போது வழங்கப்படும்? கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால் தமிழகத்தில் கரும்பு சாகுபடி குறைந்துள்ளது. தமிழகத்தில் உற்பத்தியாகும் சர்க்கரை, எத்தனாலுக்கு மதிப்பு கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் பதில்

தமிழகத்தில் கரும்பு சாகுபடி குறைந்துள்ளது என்பது தவறான கருத்து. ஆண்டுக்கு ஆண்டு சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. எந்த ஆலையும் டன்னுக்கு ரூ.1,800 மட்டுமே தருவோம் என கூறவில்லை. 2 தவணைகளாக தருவோம் என கூறியதை வைத்து அரசியல் காரணங்களுக்காக போராட்டம் நடத்துகின்றனர். கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையும், தமிழக அரசின் ஊக்கத் தொகையும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் டன்னுக்கு ரூ.2,800 தரப்படும் என்றுதான் கூறினோம். தமிழகத்தில் சுமார் ரூ.900 கோடி நிலுவைத் தொகை தர வேண்டியுள்ளது. அதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

சர்க்கரை, எத்தனாலுக்கு மதிப்பு கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சர்க் கரை ஆலைகள் கோரிக்கைவிடுத் துள்ளன. ஏற்கெனவே ஆலை களின் கோரிக்கையை ஏற்று பல சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. மதிப்பு கூட்டு வரி விலக்கு அளிப்பது அரசின் கொள்கை முடிவு. அது குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in