Published : 24 Sep 2020 07:47 PM
Last Updated : 24 Sep 2020 07:47 PM

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்; முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை ஆன்லைனில் கட்சி உறுப்பினராக்கிய திமுக: அமைச்சர் உதயகுமார் கிண்டல்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்; முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை ஆன்லைனில் கட்சி உறுப்பினராக்கி போலி உறுப்பினர் சேர்க்கையில் திமுக ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் கிண்டல் செய்தார்.

மதுரை மாநகர் ,மதுரை புறநகர் மேற்கு ,மதுரை புறநகர் கிழக்கு ஆகிய மாவட்ட அம்மா பேரவை சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் சேம்பர் ஆப் காமர்ஸ்யில் நடைபெற்றது இதனை கழக அம்மா பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்,

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் எஸ் சரவணன், கே.மாணிக்கம், பெரியபுள்ளான்என்ற செல்வம், மாநில அம்மா பேரவை இணைச்செயலாளர் இளங்கோவன்,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே தமிழரசன்,ஐ. தமிழகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

பின்னர் கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், ”அதிமுக தொடங்கிய 6 மாதத்தில் வெற்றி கண்ட இயக்கம், கட்சிக்காக உழைக்கும் தொண்டர்கள் கொண்ட இயக்கம் அதிமுக. ஆனால், திமுக ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் தவித்து வருகிறது, எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் அதிமுக ஏழை, எளிய மக்களுக்காக செயல்படுகிறது,

ஜெயலலிதாவை பெண் தானே என எத்தனையோ பேர் ஏளனமாகப் பார்த்தார்கள், நெருப்பாற்றலில் நீந்தி வெற்றி கண்டவர் ஜெயலலிதா, அதிமுகவின் கடைசி தொண்டர் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது,

திமுகவில் 60 வயதுக்கு மேலாக தான் வட்டச் செயலாளர் பதவி கிடைக்கும், அதிமுகவில் உழைக்கும் தொண்டனுக்கு பதவி தேடி செல்லும், இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் இருவரும் சாமானியர்கள், இவர்கள் உழைத்து இன்றைக்கு ஆட்சியையும் கட்சியையும் வழி நடத்தி வருகிறார்கள்

திமுகவில் காணொலி காட்சி வழியே உறுப்பினர்கள் சேர்த்து வருகிறார்கள், 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா காணொலி காட்சி வழியே திட்டங்களை செயல்படுத்தும் போது விமர்சனம் செய்தது திமுக. நேரத்துக்கு நேரம் திமுகவினர் பச்சோந்தி போலப் பேசி வருகின்றனர்,

கரோனா காலகட்டத்திலும் முதல்வர் 27 மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்துள்ளார், கரோனாவுக்குப் பயந்து கொண்டு ஸ்டாலின் 5 மாதமாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை என மக்கள் பேசி வருகின்றனர்,

திமுகவில் எல்லோரும் நம்முடன் என்று தலைப்பு வைத்து, ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை என்று அறிவித்தனர். அப்படியானால் நேற்று வரை உங்களுடன் யாரும் இல்லையா?

திமுக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை உறுப்பினராக சேர்த்து உள்ளனர்.

இதுவரை போலி வாக்காளர் தான் கேள்வி பட்டிருப்போம் ஆனால் முதன்முதலில் போலி உறுப்பினர் சேர்க்கையில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர்

கடைசி கரோனா நோயாளி இருக்கும் வரை அம்மா கிச்சன் செயல்படும், விளம்பரத்துக்காக அம்மா கிச்சன் செயல்படவில்லை, நோயாளிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தகிறது,

அதிமுகவில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேர்தல் களத்தில் ஒற்றுமையோடு செயல்படுவோம், எனக்கு பின்னால் அதிமுக 100 ஆண்டுகள் இருக்கும் என்கிற ஜெயலலிதாவின் கூற்றை காப்பாற்றுவது தான் அதிமுகவினரின் வாழ்நாள் லட்சியம்

2021 ல் நடைபெறும் தேர்தல் நமது தலையிலுத்தை நிர்ணயிக்க கூடிய தேர்தல், 2021 தேர்தலோடு திமுக சிதறு தேங்காய் போல சிதறி ஒடி விடும், இளைஞர்களால் ஆல்பாஸ் முதல்வர் என தமிழக முதல்வர் அழைக்கப்படுகிறார், அரியர்ஸ் ஆல்பாஸ் அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்தை அனுகியது யார் என்பது 20 லட்சம் மாணவர்களுக்கு தெரியும்,

இளைய சமுதாயத்தின் நலனை கருத்தில் கொண்டு அரியர்ஸ் ஆல்பாஸ் முறையை முதல்வர் அறிவித்துள்ளார்" என்று பேசினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x