Published : 24 Sep 2020 07:21 PM
Last Updated : 24 Sep 2020 07:21 PM

செப்.24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,63,691 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 3,576 3,393 145 38
2 செங்கல்பட்டு 33,626

30,714

2,382 530
3 சென்னை 1,59,683 1,46,634 9,938 3,111
4 கோயம்புத்தூர் 28,388 23,331 4,655 402
5 கடலூர் 18,972 16,953 1,807 212
6 தருமபுரி 3,247 2,083 1,141 23
7 திண்டுக்கல் 8,577 7,830 591 156
8 ஈரோடு 6,029 4,822 1,129 78
9 கள்ளக்குறிச்சி 8,911 8,199 618 94
10 காஞ்சிபுரம் 21,204 19,612 1,288 304
11 கன்னியாகுமரி 12,138 11,102 819 217
12 கரூர் 2,786 2,239 510 37
13 கிருஷ்ணகிரி 4,077 3,229 795 53
14 மதுரை 16,175 15,040 754 381
15 நாகப்பட்டினம் 4,952 4,158 717 77
16 நாமக்கல் 4,619 3,618 937 64
17 நீலகிரி 3,364 2,605 736 23
18 பெரம்பலூர் 1,719 1,579 120 20
19 புதுகோட்டை 8,536 7,588 822 126
20 ராமநாதபுரம் 5,427 5,115 194 118
21 ராணிப்பேட்டை 12,970 12,268 549 153
22 சேலம் 17,692 14,954 2,448 290
23 சிவகங்கை 4,964 4,549 298 117
24 தென்காசி 7,016 6,344 541 131
25 தஞ்சாவூர் 10,026 8,523 1,344 159
26 தேனி 14,473 13,796 504 173
27 திருப்பத்தூர் 4,573 3,849 639 85
28 திருவள்ளூர் 31,065 28,872 1,660 533
29 திருவண்ணாமலை 14,685 13,459 1,010 216
30 திருவாரூர் 6,552 5,583 901 68
31 தூத்துக்குடி 13,110 12,261 729 120
32 திருநெல்வேலி 12,196 11,053 947 196
33 திருப்பூர் 7,024 5,237 1,677 110
34 திருச்சி 9,986 8,996 848 142
35 வேலூர் 14,015 12,870 931 214
36 விழுப்புரம் 10,876 9,878 903 95
37 விருதுநகர் 14,176 13,645 322 209
38 விமான நிலையத்தில் தனிமை 924 919 4 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 934 884 50 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0
மொத்த எண்ணிக்கை 5,63,691 5,08,210 46,405 9,076

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x