புதுவைக்கு வருகை தரவிருந்த காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் சஞ்சய் தத் கரோனா தொற்றால் பாதிப்பு; நிகழ்ச்சிகள் ரத்து

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சஞ்சய் தத்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சஞ்சய் தத்.
Updated on
1 min read

புதுச்சேரிக்கு இன்று வரவிருந்த காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் சஞ்சய் தத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், புதுவைப் பொறுப்பாளருமான சஞ்சய் தத் இன்று (செப். 24) புதுவைக்கு வரத் திட்டமிட்டிருந்தார்.

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சஞ்சய் தத் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. காலை 9.30 மணிக்கு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து, 10.30 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு, தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் சந்திப்பு, 12 மணிக்கு சென்னை புறப்பாடு என நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று (செப். 23) இரவு சஞ்சய் தத் வருகை தவிர்க்க முடியாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது என, காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இச்சூழலில், சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நிர்ணயிக்கப்பட்ட பயணங்களுக்கு நான் செல்வதற்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனையில் எனக்குக் கரோனா தொற்று இருப்பதாக உறுதியானது. இதனால் நான் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன்.

கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து கரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in