

‘இந்து தமிழ்’ செய்தி எதிரொலி யாக கொடைக்கானல் மலைக் கிராமங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களை ஆய்வு செய்ய 2 பேர் கொண்ட குழுவினர் கொடைக் கானல் வந்தனர்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த சுற் றுலா மேம்பாட்டுத் திட்டம் சார்பில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கொடைக்கானல் மலைகிராம சுற்றுலாவை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து சுற்றுலாத்துறை சார்பில் அதிகாரிகள் லோகேஷ், பிரசன்னா ஆகியோர் கொடைக் கானல் மலை கிராமப் பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
பேத்துப்பாறையில் உள்ள ஆதிமனிதன் கற்திட்டை, அஞ்சுவீடு அருவி, நீராவி அருவி உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர். சுற்றுலாப் பயணிகளுக்கு தேவை யான அடிப்படை வசதி களை செய்து தருவது குறித்து அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது கொடைக்கானல் சுற்றுலாத்துறை உதவி அலுவலர் ஆனந்தன் உடனிருந்தார்.
இந்த 2 பேர் குழு இன்றும் கொடைக்கானல் மேல் மலை கிராமங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களை ஆய்வு செய்ய உள்ளது. தற்போது நடைபெறும் ஆய்வின் மூலம் கண்டறியப்படும் சுற்றுலாத் தலங்களை அதிகாரப்பூர்வமாக சுற்றுலா வரைபடத்தில் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை களால் சுற்றுலாவை மேம்படுத்த முடியும். சுற்றுலாபயணிகள் வருகையையும் அதிகரிக்கச் செய்ய முடியும் என சுற்றுலாத்துறை எதிர் பார்க்கிறது.
ஆய்வை தொடர்ந்து மாநில சுற்றுலாத்துறைக்கு அறிக்கை அனு ப்பி ஒப்புதல் பெறவுள்ளனர்.