

பெண்ணாடம் அடுத்த துறையூரில் இருநாட்களுக்கு முன் 4 வீடுகளில் கதவைஉடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப் பட்டது.
வேப்பூர், விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி பகுதிகளிலும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன. இதையடுத்து கடலூர் எஸ்பி அபிநவ், நேற்று விருத்தாச லத்தில் காவல் ஆய்வாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
போலீஸார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும்.வாகனத் தணிக்கையையும் மேற்கொள்ளவேண்டும் என அவர் அறி வுறுத்தியுள்ளார். விருத்தாசலம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கவும் உத்தரவிட் டுள்ளார். "கரோனா தடுப்பு பணியில் இரவு, பகல் பாராமல் பணி செய்து வருகிறோம். காவ லர்கள் பற்றாக்குறை உள்ளது. கூடுதல் காவலர்களை நியமிக்காமல் இரவு ரோந்துப் பணியில் செல்ல கடலூர் எஸ்பி தெரிவித் துள்ள அறிவுரை பணிச்சுமையை அதிகரிக் கும். மன அழுத்தம் ஏற்பட வழி வகுக்கும்" என காவலர்கள் கவலை தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டதில், "காவலர்கள் பற்றாக்குறையை போக்க ஆயுதப்படை போலீஸாரை காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் திட்டம் உள்ளது" என தெரிவித்தனர்.