கடலூர் மாவட்டம் ஆதனூர், நாகப்பட்டினம் மாவட்டம் குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் பணி நடைபெறுகிறது. 	படம்: க.ரமேஷ்
கடலூர் மாவட்டம் ஆதனூர், நாகப்பட்டினம் மாவட்டம் குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் பணி நடைபெறுகிறது. படம்: க.ரமேஷ்

ஆதனூர் - குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டுமான பணி எப்போது நிறைவு பெறும்?

Published on

கடலூர் மாவட்டம் ஆதனூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டுமான பணிகள் கடந்த 43 நாட்களாக தீவிரமடைந்துள்ளன.

கடலூர் மாவட்டம் ஆதனூர், நாகப்பட்டினம் மாவட்டம் குமார மங்கலம் கிராமங்களுக்கு இடையேகொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, ரூ. 400 கோடி மதி்ப்பில் தலைப்பு மதகுகளுடன் கூடிய கதவணை மற்றும் பாலம் அமைக்கும் திட் டத்தை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்தார். இத்திட்டத்தை கடந்த ஆண்டு மே 4-ம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி கானொலி காட்சி மூலம் அடிக்கல்நாட்டி தொடங்கி வைத்தார். இப்பணி 24 மாதங்களில் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்கும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வந்தது.

தற்போது கட்டுமானப்பணிகள் கூடுதல் தரத்தில் கட்டப்படுவதால் ரூ. 494.83 கோடியாக மதிப்பீடு உயர்ந்துள்ளது. வரும் டிசம்பரில் கதவணை பணிகள் முழுவதும் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதி ர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் கரோனா ஊரடங்கு போன்ற கார ணங்களால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன.

இப்பணிகள் குறித்து கும்பகோ ணம் கோட்ட பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரங்கள் செயற் பொறியாளர் கண்ணன் கூறியது:

பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களால் கதவணை பணி கள் தாமதமாகி வந்தன. கடந்த 43 நாட்களாக பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

இதுவரை ஆரம்ப கட்டப் பணிகள் 55 சதவீதத்திற்கு மேல் நிறைவு பெற்றுள்ளது. வரும் 2021 மே மாதம் கதவணை திட்டப் பணி கள் முழுவதும் நிறைவு பெறும் என தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in