

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கிடு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்று, 1996-2001-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாகப் பணியாற்றியவர் ஜி.பி. வெங்கிடு (86). கரோனா பாதிப்பு காரணமாக, கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மொழிப்போர் தியாகியான ஜி.பி.வெங்கிடுவின் மறைவுக்கு திமுக மாவட்டச் செயலாளர் நல்லசிவம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.