Published : 24 Sep 2020 07:28 AM
Last Updated : 24 Sep 2020 07:28 AM

தமிழகத்தில் தற்போது பொது முடக்கம் அமல்படுத்த அவசியம் எழவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

தமிழகத்தில் தற்போது பொது முடக்கம் அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை, புரசைவாக்கம் தானா தெருவில் காய்ச்சல் பரிசோதனை முகாமை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். அதன்பின் கரோனா தடுப்பு விழிப்புணர்வு ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குணமடைவோர் அதிகரிப்பு

சென்னையில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்தாலும்பொதுமக்களுக்காக தொடர்ந்துகாய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன கரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சராசரியாக தினசரி 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. கரோனா நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதால் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மருத்துவ வல்லுநர் குழு உள்ளிட்ட குழுக்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் தற்போது பொதுமுடக்கம் அமல்படுத்த வேண்டியஅவசியம் இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை.

வேளாண் மசோதா

வேளாண் மசோதாவில் விவசாயிகளை பாதிக்கும் எந்த அம்சங்களும் இல்லை. எனவே அதன் நன்மைகளை விளக்கும் வகையில் முதல்வரின் அறிக்கைஅமைந்துள்ளது. எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை போராட்டக்களமாகவும், கொந்தளிப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார். தற்போது வேளாண் மசோதாவை வைத்து அக்கட்சியினர் மக்களிடம் பொய்ப் பிரச்சாரம் செய்துவருகின்றனர். இந்த விஷயத்திலும் திமுகவுக்கு தோல்விதான் கிடைக்கும்.

அதிமுக செயற்குழு கூட்டத்தைப் பொறுத்தவரை, எம்ஜிஆர்,ஜெயலலிதா காலத்தில் எப்படிநடைபெற்றதோ, அதேபோல்ஆரோக்கியமான ஆலோசனையை முன்னெடுக்கும் வகையில் கூட்டம் இருக்கும். தேவைப்பட்டால் கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். தேர்தல் பணிகள் மேற்கொள்வது குறித்து செயற்குழுவில் ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x