

தாம்பரம் அருகே சிட்லப்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்துள்ளோருக்கு பொதுப்பணி மற்றும் வருவாய்த் துறையினர் சார்பில், நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.
சட்டசபையில் 110 விதியின்கீழ், சுற்றுச்சூழல் துறையில் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம் சிட்லப்பாக்கம் ஏரியில் சூழல் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முதல்வர் பழனிசாமி ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்தார்.
இதையடுத்து முதல்கட்டமாக 374 ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் மற்றும் பொதுப்பணித் துறையினர், கடந்த செப்.18-ம்தேதி நோட்டீஸ் வழங்கத் தொடங்கினர். ஆக்கிரமிப்பாளர்கள் தகராறில்ஈடுபட்டதால் நோட்டீஸ் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் நோட்டீஸ் வழங்கும் பணி தொடர்ந்தது. மேலும்வருவாய்த் துறையினர் அளவீடுசெய்த பிறகு, மேலும் பல ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.