பவுன் விலை ஒரே நாளில் ரூ.248 உயர்வு

பவுன் விலை ஒரே நாளில் ரூ.248 உயர்வு
Updated on
1 min read

சர்வதேச அளவில் தங்கம் விலை மற்றும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்துள்ளதால் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ.20,256-க்கு விற்கப்பட்டது.

கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.2,501 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ.20,008 ஆகவும் இருந்தது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.31-ம், பவுனுக்கு ரூ.248-ம் உயர்ந்தது. இதனால் நேற்று தங்கம் ஒரு கிராம் ரூ.2,532-க்கும், ஒரு பவுன் ரூ.20,256-க்கும் விற்கப்பட்டது.

சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் ‘தி இந்து’விடம் கூறியபோது, ‘‘தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in