Published : 24 Sep 2020 06:44 AM
Last Updated : 24 Sep 2020 06:44 AM

தமிழகத்துக்கான அவசரகால தொகுப்பு நிதியை ரூ.3000 கோடியாக உயர்த்த வேண்டும்: பிரதமருடனான ஆலோசனையில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை

கோப்புப் படம்

சென்னை

தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த, அவசரகால தொகுப்பு நிதியை ரூ.3 ஆயிரம் கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

கரோனா பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோ சனையில் தமிழகம் சார்பில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் சி.விஜய பாஸ்கர், ஆர்.பி.உயதயகுமார், தலை மைச் செயலர் கே.சண்முகம், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

தமிழகத்தை பொறுத்தவரை நாட்டி லேயே அதிக அளவில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வரு கின்றன. மாநிலம் முழுவதும் 176 பரிசோதனை மையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் சராசரியாக நாள் ஒன்றுக்கு 85 ஆயிரம் பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இதுவரை மொத்த மாக 66 லட்சத்து 40 ஆயிரத்து 58 பரி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 5 லட்சத்து 52 ஆயிரத்து 674 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது 46,350 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

கரோனா பரிசோதனைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடியே 80 லட்சம் செலவாகும் நிலையில், இதில் 50 சதவீ தத்தை பிஎம்-கேர் நிதியில் இருந்து வழங்க வேண்டும். தமிழகத்தில் மிக குறைவாக 1.62 சதவீதம் என்ற அளவில் மட்டுமே இறப்பு பதிவாகி வருகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத் தில் 90 சதவீதம், அதாவது 4 லட்சத்து 97 ஆயிரத்து 377 பேர் குணமடைந் துள்ளனர். அரசின் நடவடிக்கைகளால் பாதிப்பு விகிதம் 10.47 சதவீதத்தில் இருந்து 6.2 சதவீதமாக குறைக்கப்பட் டுள்ளது. இன்றைய நிலையில், எந்த மாவட்டத்திலும் 10 சதவீதத்துக்கு அதிகமாக பாதிப்பு இல்லை. சென்னை யில் ஜூன் மாதம் 2,300 ஆக இருந்த தினசரி பாதிப்பு, தற்போது ஆயிரத் துக்கு கீழ் குறைக்கப்பட்டுள்ளது. ஆரம்பம் முதலே இந்திய மருத்துவ முறை சிகிச்சைகளை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.

மேலும், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து போதிய மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை வாங் கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நடத் தப்பட்ட காய்ச்சல் முகாம்களால் புதி தாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. கிராமம் மற்றும் நகர்ப் புறங்களில் வாழும் ஏழை மக்களுக் கான மருத்துவ சேவையை மேம் படுத்த, 2 ஆயிரம் ‘மினி கிளினிக்’ அமைக்கப்படும் என அறிவித்துள் ளேன். பெருந்தொற்று காலத்தில் கள அளவிலான மருத்துவம் மற்றும் ஆலோ சனை சேவைகளை மேம்படுத்த இவை உதவும்.

இ-சஞ்சீவினி ஓபிடி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, நாட்டி லேயே முதல் இடத்தை தமிழகம் பிடித் துள்ளது. இன்றுவரை, ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 525 பேருக்கு ஆலோ சனைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக பொருளாதாரத்தை மேம் படுத்த அமைக்கப்பட்ட ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலை மையிலான குழு அளித்த பரிந்துரை கள் அடிப்படையில் உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட உள்ளது. வங்கி யாளர்களுடன் நடத்தப்பட்ட கூட்டத் தால், 2 லட்சத்து 46 ஆயிரத்து 125 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இதுவரை ரூ.8 ஆயிரத்து 19 கோடியே 51 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்க உள்ள நிலையில், அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.

கோரிக்கைகள்

அவசர காலம் மற்றும் மருத்துவ திட்ட தொகுப்பு நிதியாக தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.712 கோடியே 64 லட்சத்தில், 2 தவணையாக ரூ.511 கோடியே 64 லட்சம் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த தொகுப்பு நிதியை ஏற்கெனவே கேட்டபடி ரூ.3 ஆயிரம் கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும். மாநில பேரிடர் நிதியை முழுமையாக பயன்படுத்திவிட்ட நிலையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இடைக்கால நிதியாக ரூ.1,000 கோடியை விடுவிக்க வேண்டும். நெல் கொள்முதலுக்காக வழங்க வேண்டிய ரூ.1,321 கோடியை விரைவாக வழங்க வேண்டும்.

நீட் தேர்வில் வெற்றி பெறும் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளு நரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள் ளது. இதன் மூலம் ஏழை மாணவர் களுக்கு சமூகநீதி வழங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

தமிழகத்துக்கு பிரதமர் பாராட்டு

முதல்வர்களுடனான காணொலி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழகம், பிறமாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. நோய் அறிகுறிகள், கரோனா தொடர்புகளை கண்டறிவதில் பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் தமிழகம் பல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அரசின் பல நடவடிக்கைகளால், தமிழகத்தில் இறப்பு விகிதம் மேலும் குறையும் என முழு நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் நோய் அதிகம் காணப்படும் 7 மாவட்டங்களில் மட்டும் தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசின் ஆயுஷ் சஞ்சீவினி செயலியை தமிழக அரசு சிறப்பாக பயன்படுத்தி தொலை மருத்துவத் துறையில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தின் அனுபவம் நாட்டுக்கே உதாரணமாக திகழ்கிறது. இது நாட்டின் பிற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக திகழும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x