நாளை திமுக முப்பெரும் விழா: விருதுகள், பரிசுகள் வழங்கப்படும்

நாளை திமுக முப்பெரும் விழா: விருதுகள், பரிசுகள் வழங்கப்படும்
Updated on
1 min read

திமுக முப்பெரும் விழா சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறி வாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நாளை (செப்டம்பர் 15) மாலை 5 மணிக்கு நடை பெறவுள்ளது.

அண்ணா பிறந்த நாள், பெரி யார் பிறந்த நாள், திமுக தொடக்க நாள் ஆகியவற்றை ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழாவாக திமுக கொண்டாடி வருகிறது.

இந்த ஆண்டுக்கான முப் பெரும் விழா அண்ணா அறிவா லயத்தில் நாளை நடைபெறுகிறது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் அக் கட்சியின் தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுரு கன் உள்ளிட்டோர் பங்கேற்கின் றனர்.

விழாவில் ஆண்டிமடம் எஸ்.சிவசுப்பிரமணியத்துக்கு பெரியார் விருது, பெங்களூரு வி.தேவராசனுக்கு அண்ணா விருது, பவானி ராஜேந்திரனுக்கு பாவேந்தர் விருது, கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு கலைஞர் விருது வழங்கப்படுகிறது.

மேல்நிலைப் பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் நிதியும், சான்றிதழும் வழங்கப்படுகிறது. முரசொலி அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதியளிப்பு, சான்றிதழ், சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சான்றிதழ், பண முடிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற வுள்ளது.

பெரியாரின் 137-வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 17-ம் தேதி சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் கரு ணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டா லின் உள்ளிட்டோர் மாலை அணி விக்க இருப்பதாக திமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in