

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண் டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளார்.
டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தமிழக காங் கிரஸ் சார்பில், சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் எஸ்டி பிரிவுத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, விஜயதாரணி எம்எல்ஏ, ராயபுரம் மனோ உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசிய தாவது:
விஷ்ணுபிரியா துணிச்சலான, நேர்மையான, போலீஸ் அதிகாரி யாக செயல்பட்டார். அவரது தற்கொலையில் மர்மம் இருக்கிறது. அவரது மரணம் பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா, விஷ்ணுபிரியா தற்கொலை வழக் கில் சிபிஐ விசாரணை தேவை யில்லை. சிபிசிஐடி விசாரணையே போதும் என்று தெரிவித்துள்ளார். ஒரு பெண் போலீஸ் அதிகாரியின் தற்கொலை சாதாரணமானதல்ல. அவர் விபத்திலோ, மாரடைப்பு ஏற்பட்டோ இறக்கவில்லை. தற்கொலை செய்துக் கொண் டுள்ளார்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 216 போலீஸார் இறந்துள்ளனர். வேளாண்துறையில் முத்துக்குமார சாமி தற்கொலை வழக்கில், அந்த துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி ராஜினாமா செய்தார். அதே போல் காவல் துறையை சேர்ந்த விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்கு பொறுப்பேற்று, அந்த துறையை வைத்திருக்கும் ஜெயலலிதா ராஜினாமா செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சி பெண்களுக்காக கடைசி வரை போராடும். தேவை என்றால் ஆயுதம் எடுக்கவும் தயங்க மாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.