

முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் வள்ளியூரில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக நிச்சயம் போட்டியிடும்.
அங்கு மீண்டும் நான் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். தமிழகத்திலுள்ள 234 சட்டப் பேரவை தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் வகையில் பலத்தை பெருக்கி வருகிறோம். சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கில் தமிழக அரசு உரிய நடவடி க்கைகளை எடுத்துள்ளது. அதுபோலவே தட்டார்மடம் போலீஸ் சரகத்தில் நடைபெற்றுள்ள இளைஞர் கொலை வழக்கிலும் காவல் துறை துறைரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உரிய நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்றார்.
திருநெல்வேலி மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் கட்டளை ஜோதி, கன்னியாகுமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் உடனிருந்தனர். 234 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் வகையில் பலத்தை பெருக்கி வருகிறோம்.