மதுரை சலூன் கடைக்காரர் மீது கந்து வட்டி சட்டத்தில் வழக்கு: பிரதமரால் பாராட்டப்பட்டவர்

மதுரை சலூன் கடைக்காரர் மீது கந்து வட்டி சட்டத்தில் வழக்கு: பிரதமரால் பாராட்டப்பட்டவர்
Updated on
1 min read

பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மீது கந்து வட்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை அண்ணா நகர் அன்பு நகரைச் சேர்ந்தவர் சேங்கை ராஜன்(50). இவர் மதுரை மேலமடையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகனிடம் கடந்த 13-ம் தேதி ரூ.30 ஆயிரம் கடன் வாங்கினார்.

இதற்கான வட்டியுடன் அசல் தொகையை திருப்பிக் கொடுத்துள்ளார். இதன் பிறகும் சேங்கை ராஜனிடம் மோகன் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் மோகன் மீது சேங்கைராஜன் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக அவரை விசாரணைக்கு வருமாறு அண்ணா நகர் போலீஸார் அழைத்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதைத் தொடர்ந்து அவர் மீது கந்து வட்டி சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை தேடிவருகின்றனர்.

கரோனா ஊரடங்கின்போது மகளின் படிப்பு செலவுக்காக சேமித்து வைத்த பணத்தில் ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கியதாக பிரதமரால் பாராட்டப்பட்டவர் மோகன். இவர் சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in