குமரி தொகுதியை பாஜக கைப்பற்றும்: தமிழக பாஜக தலைவர் முருகன் உறுதி

குமரி தொகுதியை பாஜக கைப்பற்றும்: தமிழக பாஜக தலைவர் முருகன் உறுதி
Updated on
1 min read

இடைத்தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை பாஜக கைப்பற்றும் என தமிழக பாஜக தலைவர் முருகன் பேசினார்.

கன்னியாகுமரி மாவட்ட பாஜக ஆலோசனைக் கூட்டம் தக்கலையை அடுத்த பருத்திகாட்டுவிளையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் திரளோனார் கலந்துகொண்டனர்.

பாஜகவில் புதிதாக சேர்ந்தவர்களுக்கான உறுப்பினர் அட்டைகளை வழங்கி, முருகன் பேசியதாவது: தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக மாறியுள்ளது. கன்னியாகுமரியில் தொடங்கிய மாற்றம் சென்னை வரை நீடிக்கிறது. மத்தியில் மோடியின் நல்லாட்சியே இதற்கு காரணம். தமிழகத்திலும் இதுபோன்ற ஆட்சியை மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். இடைத்தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியை பாஜக கைப்பற்றும். வெற்றிபெறுபவர் மத்திய அமைச்சராக இருப்பார். மே மாதம் நடைபெறும் தேர்தலில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் நமது முதல்வர் கொடியேற்றுவார் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in