உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் பெற ஒரு வாரம் அவகாசம்

உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் பெற ஒரு வாரம் அவகாசம்
Updated on
1 min read

ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ், இலவச சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ், 32.43 லட்சம் பயனாளிகள் உள்ளனர்.

இவர்களுக்கு சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் ரூ.1,600 இன்றி, இலவசமாக இணைப்பு வழங்கப்படுகிறது.

மேலும், காஸ் அடுப்பு மற்றும் சிலிண்டருக்கான தொகை மட்டும் மாதம்தோறும், சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத் தொகையில் தவணையாக பிடித்தம் செய்யப்படும்.

இந்நிலையில், கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்களுக்கு தலா ஒரு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மொத்த பயனாளிகளில் பாதிபேர் மட்டுமே இந்த இலவச சிலிண்டரை வாங்கினர். சிலிண்டர் வாங்காத பயனாளிகள் பயன்பெறும் வகையில், இத்திட்டம்செப்.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

பயனாளிகள் சிலிண்டரை வாங்குவதற்காக அவர்களது வங்கிக் கணக்கில் எண்ணெய் நிறுவனங்கள் அதற்கான தொகையை முன்கூட்டியே செலுத்தும்.

இந்நிலையில், தற்போது இந்த இலவச சிலிண்டர் வாங்க இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ளதால், உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் பெற பதிவு செய்யாத பயனாளிகள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in