

மணப்பாக்கம் நீர்நிலை ஆக்கிர மிப்பை அகற்ற எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை என்று முன்னாள் மேயர் மா.சுப்பி ரமணியன் குற்றம்சாட்டினார்.
ஆலந்தூரில் அடிப்படை தேவைகளை செய்யக் கோரி மணப்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் துக்கு தலைமையேற்ற முன்னாள் மேயரும் திமுக சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் சென்னை மாநகராட்சியின் 157-வது வார்டு உள்ளது. இந்த வார்டில் உள்ள மணப்பாக்கத்தில் 85 சென்ட் பரப்பளவு உள்ள நீர்நிலைக் குட்டையொன்று நீண்ட காலமாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்த நீர்நிலைக் குட்டையை சிலர் ஆக்கிரமித்து, வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்து பல கோடி ரூபாய் களை சுருட்டி உள்ளனர். அப்படி வீட்டுமனைகளாக விற்பனை செய்யப்பட்ட இடங்களுக்கு, தவறான முறையில் மின் இணைப் பும் கொடுக்கப் பட்டிருக்கிறது. இதுகுறித்து மணப்பாக்கம் பகுதி மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டும் எந்த தீர்வும் இதுவரை கிடைக் கவில்லை.
அதேபோல, அப்பகுதியில் உள்ள கோலியம்மன் கோயி லுக்குச் சொந்தமான நிலத்தையும் ஆக்கிரமித்து வீட்டுமனையாக்கி விற்பனை செய்துள்ளனர். இந்தக் கோயில் நிலத்தை மீட்கக் கோரியும், ஆலந்தூரில் அடிப்படை தேவைகளை செய்ய வலியுறுத்தியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளன், ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளர் என்.சந்திரன், மாவட்டப் பொருளாளர் எம்.எஸ்.கே.இப்ராகிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.