Published : 03 Sep 2015 07:55 AM
Last Updated : 03 Sep 2015 07:55 AM

பிளாஸ்டிக் ஒழிப்பு வணிகர்களை பாதிக்கும்: முதல்வர் தனிப் பிரிவில் வணிகர் சங்கம் மனு

அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து வணிகர் களிடமிருந்து பொருட்களை பறிமுதல் செய்வதால் வணிகர்கள் பாதிப்படைகின் றனர் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முதல்வர் தனி பிரிவில் மனு அளித்துள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா, மாநிலப் பொதுச் செயலாளர் கே.மோகன், மாநிலப் பொருளாளர் வி.கோவிந்தராஜூலு ஆகியோர் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வணிகர்கள் பிளாஸ்டிக் பை, கப் உள் ளிட்டவைகளை விற்கக் கூடாது எனவும் மீறினால் அவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் படும் என்றும் மாவட்ட ஆட்சியர்களின் அறி விப்புகள் வெளிவந்து கொண்டிருக் கின்றன.

2011-ம் ஆண்டில் 40 மைக்ரான் அள வுக்கு கீழே உள்ள பிளாஸ்டிக் பைகளைத்தான் மத்திய அரசு தடை செய்தது. ஆனால், சட்ட விதிகளுக்கு முரணாக அதிகாரிகள் அனைத்து வகை பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்கின்றனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வகைகளை உற்பத்தி நிலை யிலும் வெளி மாநிலத்திலிருந்து உள்ளே வரும்போதும் தடுக்கலாம். பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். மாறாக வணிகர்களை குற்றவாளிகளாக கருதி நடவடிக்கை எடுக்கக் கூடாது.

எந்த வகை பிளாஸ்டிக் தடைசெய்யப் பட்டுள்ளது என்பதை சட்டப்பூர்வ ஆதாரங்களுடன் அரசு அதிகாரிகள் வெளியிட வேண்டும். சட்ட விதிகளுக்கு மாறாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x