சட்டப்பேரவையில் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த மனு மீது நாளை விசாரணை

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

சட்டப்பேரவையில் குட்கா பொருட்களை காண்பித்த விவகாரத்தில், உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த ரிட் மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

தேர்தலில் போட்டியிட கடந்த 2017-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட, குட்காவை சட்டப்பேரவைக்குள் கொண்டு சென்றதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 2017-ம் ஆண்டு அனுப்பிய நோட்டீஸ் செல்லாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
வேண்டுமானால் புதிய நோட்டீசை அனுப்பி விசாரிக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தனர். அதன்படி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமைக்குழு கடந்த 7-ம் தேதி மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைசக் கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பதை தடுக்க இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக திமுக கூறியது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உரிமைக் குழு அனுப்பிய புதிய நோட்டீஸ் தொடர்பான விசாரணையில் இருந்து நீதிபதி ரவிச்சந்திரபாபு விலகினார்.இதையடுத்து திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், 2-வது உரிமை மீறல் நோட்டீசுக்கு எதிரான திமுக மனுவை நீதிபதி புஷ்பா சத்யநாராயணா நாளை (செப். 23) விசாரிக்க் உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in