ஹெல்மெட் விவகாரம்: வழக்கறிஞர்கள் மீதான அவமதிப்பு வழக்கை இன்று ரகசியமாக விசாரிக்க முடிவு - உயர் நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு

ஹெல்மெட் விவகாரம்: வழக்கறிஞர்கள் மீதான அவமதிப்பு வழக்கை இன்று ரகசியமாக விசாரிக்க முடிவு - உயர் நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு
Updated on
1 min read

ஹெல்மெட் கட்டாயம் உத்தரவை எதிர்த்து போராட்டம் நடத்தியது தொடர்பாக மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர், செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்று ரகசியமாக நடத்த உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக உயர் நீதிமன்ற வளாகம், விசா ரணை நடைபெறும் நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களில் உயர் பாது காப்பு அளிப்பதுடன், விசாரணை நடவடிக்கைகளை கேமராவில் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட் டுள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கண்டிப்பாக ஹெல் மெட் அணிய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மதுரையில் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். அப்போது நீதிபதிகளையும் விமர்சனம் செய்தனர். அதனால் மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.தர்மராஜ், செயலாளர் ஏ.கே.ராமசாமி ஆகியோர் மீது உயர் நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. கடந்த முறை விசாரணையின்போது இருவரும் நேரில் ஆஜரானார்கள். இந்த நிலையில் இவ்வழக்கு இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதுதொடர்பாக நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:

இவ்வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு பேருந்துகளில் வழக்கறிஞர்கள் பெயரில் ஆட்களை அழைத்து வரப் போவதாக நீதிமன்றத்தின் கவனத் துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றச் சூழல் பாதிக்கப்படுவதுடன், சேதமும் ஏற்படலாம். எனவே, சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் ரகசிய விசாரணை நடைபெறவுள்ளதால் நீதிமன்றத்துக்குள் வருவோரைக் கட்டுப்படுத்த வேண்டும். நீதிமன்ற அறையிலும், வெளி யிலும், வராண்டாக்களிலும் காவல்துறையினர் சீருடையிலும், சாதாரண உடையிலும் பாது காப்பு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான இடங்களிலும், நீதிமன்றத்திலும் கேமராக்கள் பொருத்தி விசாரணை நடவடிக்கைகளைப் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in