பிசிஜி உள்ளிட்ட தடுப்பூசிகளால் குழந்தைகளுக்கு கரோனா தொற்று குறைவு

பிசிஜி உள்ளிட்ட தடுப்பூசிகளால் குழந்தைகளுக்கு கரோனா தொற்று குறைவு
Updated on
1 min read

பிசிஜி உள்ளிட்ட தடுப்பூசிகள் போடப்படுவதால் குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு குறைவாக உள்ளது என்று மாநிலகுழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் எஸ்.சீனிவாசன் தெரிவித் தார்.

தமிழகத்தில் இதுவரை 5.40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறார்களின் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரம் என்ற அளவில் குறைவாகவே உள்ளது. இதைத் தொடர்ந்து குழந்தைகளை கரோனா வைரஸ் தொற்று பாதிக்காதது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி

இதுதொடர்பாக மாநில குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளரும், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டருமான எஸ்.சீனிவாசன் கூறியதாவது:

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் பாதிப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.இதற்கு நோய் எதிர்ப்பு சக்தியேமுக்கிய காரணம். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியில் வேறுபாடு உள்ளது.

குழந்தைகளுக்கு பிசிஜி உள்ளிட்ட பல தடுப்பூசிகள் போடப்படுகின்றன. குழந்தைகளின் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும். புகைபிடிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் பெரியவர்களின் நுரையீரலில் பாதிப்பு இருக்கும். மேலும் குழந்தைகள் பெரும்பாலும் வெளியே செல்வதில்லை. இவையே கரோனா பாதிப்பில் குழந்தைகள் விகிதம் குறைவாக இருப்பதற்கான காரணங் களாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in