

முதல்வரின் செயலர் சாய்குமார் உட்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்டஅறிவிப்பு:
கடந்த 1990-ம் ஆண்டு ஐஏஎஸ்பணியில் சேர்ந்த 5 அதிகாரிகள், முதன்மை செயலர் நிலையில் இருந்து கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, முதல்வரின் செயலர்நிலை-1 எம்.சாய்குமார், தமிழ்நாடு சிறுதொழில் கழகம் (டான்சி) தலைவர் விபு நய்யர், வருவாய் நிர்வாகஆணையர் கே.பணீந்திர ரெட்டி,நகர்ப்புற நில உச்சர வரம்பு, நிலவரித் திட்ட ஆணையர் பி.சிவசங்கரன், போக்குவரத்து ஆணையர் டி.எஸ்.ஜவகர் ஆகியோர் கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளனர். இதன்மூலம் அவரவர் பதவிகள் கூடுதல் தலைமைச்செயலர் அந்தஸ்துக்கு தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ளன.