கேஸ் ஏஜென்சிகளிடம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியில் உள்ளவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கேஸ் டெலிவரி செய்யும் தொழிலாளர்கள். | படம்: ஜி.ஞானவேல்முருகன்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கேஸ் டெலிவரி செய்யும் தொழிலாளர்கள். | படம்: ஜி.ஞானவேல்முருகன்.
Updated on
1 min read

கேஸ் ஏஜென்சிகளிடம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியில் உள்ளவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன்ஸ் தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.கணேஷ், திருச்சி மாவட்டத் தலைவர் பி.சந்திரமோகன் ஆகியோர் தலைமையில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (செப். 21) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

மேலும், "கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் வீதம் ஊதியம் வழங்க வேண்டும். முழு மற்றும் காலி சிலிண்டர்களைக் கையாள்வதற்கான கூலியாக டெலிவரிமேன்களுக்கு சிலிண்டருக்கு ரூ.40.25 வீதம் வழங்க வேண்டும். சிலிண்டர் ஏற்றிச் செல்லப் பயன்படுத்தும் வாகனங்களின் பராமரிப்புச் செலவை கேஸ் நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

கேஸ் டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம், பண்டிகை கால ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும்" ஆகிய கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தொடர்ந்து, ஆட்சியர் சு.சிவராசுவிடம் தொழிலாளர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in