Published : 21 Sep 2020 07:48 AM
Last Updated : 21 Sep 2020 07:48 AM

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட கிளாம்பாக்கம் மேம்பாலப் பணிகள் தாமதம்: சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் குற்றச்சாட்டு

திமுக ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு தாமதமாக நடைபெற்று வரும் கிளம்பாக்கம் மேம்பால பணிகள். படம்: எம். முத்துகணேஷ்.

வண்டலூர்

வண்டலூரில் அதிமுக ஆட்சியின்போது தொடங்கப்பட்ட மேம்பாலம் அண்மை யில் திறக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட மேம்பாலப் பணிகள் இன்னும் முடிய வில்லை என சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

வண்டலூர் - கிளாம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கடவுப்பாதை அடிக்கடி மூடப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதற்கு தீர்வாக, நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.37.95 கோடி மதிப்பீட்டில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கள் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப் பட்டன.

மேம்பாலம் தொடங்கும் இரு பகுதி களான கிளாம்பாக்கம் மற்றும் தேசிய நெடுஞ்சாலையோரம் நிலம் கையகப் படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதத்தால் பணிகள் நத்தை வேகத்தில் நடந்தன. தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிந்த நிலையிலேயும் பணிகளில் வேகம் கூட்டப்படவில்லை. இதனால் மேற்கண்ட பகுதி மக்கள் தினமும் 4 கி.மீ சுற்றிச் சென்றுவர வேண்டியுள்ளது.

எனவே பணிகளை விரைந்து முடிக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரி வருகின்றனர். கட்சி பாகுபாடு காரணமாகத்தான் மேம்பாலப் பணி விரைந்து முடிக்காமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து வண்டலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எ.கோபால் கூறிய தாவது: திமுக ஆட்சிக் காலத்தில் கிளாம் பாக்கம் மேம்பாலம் கட்டும் பணி தொடங் கப்பட்டு, இதுவரை 80 சதவீத பணிகளே முடிந்துள்ளன. இதன் அருகில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வண்ட லூர் பூங்கா அருகே ரூ.55 கோடியில், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட மேம்பாலம் கடந்த 17-ம் தேதி திறக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் சென்னை புறநகரில் நடைபெறும் பாலங்கள் குறித்து பேசினார். ஆனால் கிளாம்பாக்கம் பாலம் தொடர்பாக எதுவும் சொல்லவில்லை.

அதிமுக அரசு மக்கள் நலனை கருத் தில் கொண்டிருந்தால் அந்தப் பாலம் எப்போதோ மக்கள் பயன்பாட்டுக்கு வந்தி ருக்கும். தற்போது மேம்பாலப் பணி நடை பெறும் நிலையை பார்த்தால், இன்னும் ஓராண்டு ஆகும் போலிருக்கிறது என வேதனையுடன் தெரிவித்தார்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வண்டலூர் - கிளாம்பாக்கம் மேம்பாலம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடம் மிகவும் குறுகலானது. ரயில்வே நிர்வாகம் ஒப்புதல், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல் போன்ற துறைகளிடம் இருந்து அனுமதி கிடைப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டது.

கையகப்படுத்தப்பட்ட நில உரிமை யாளர்கள் நீதிமன்றம் சென்றதாலும் பணி கள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது அனைத்து சிக்கல்களும் முடிந் துள்ளன. வரும் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x