டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.300 முதல் 500 வரை ஊதிய உயர்வு: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.300 முதல் 500 வரை ஊதிய உயர்வு: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு
Updated on
1 min read

டாஸ்மாக் பணியாளர்கள் 26 ஆயிரத்து 416 பேருக்கு ரூ.300 லிருந்து 500 வரை தொகுப்பூதியம் உயர்த்தப்படும் என அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

மதுபானங்கள் அதிகமாக விற்கப்பட்டதால் விற்பனை தொகை அதிகரிக்கவில்லை. மதுபானங்களின் விலை உயர்வு காரணமாக அதிரித்துள்ளது. மதுபான கடைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவில்லை. கடந்த திமுக ஆட்சியில் இருந்த அளவிற்கே மதுபான கடைகளின் எண்ணிக்கை உள்ளது. டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

டாஸ்மாக் கடைகளில் 7 ஆயிரத்து 152 மேற்பார்வையாளர்கள், 15 ஆயிரத்து 530 விற்பனையாளர்கள் மற்றும் 3 ஆயிரத்து 734 உதவியாளர்களும் பணியாற்றுகி்னறனர். இவர்களுக்கான தொகுப்பூதியம் கடந்தநான் ஆண்டுகளில் உயர்த்தப்பட்டது.

இந்தாண்டும், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கான மாத தொகுப்பு ஊதியம் ரூ.500, 400 மற்றும் 300 உயர்த்தி வழங்கப்படும். இந்த ஊதிய உயர்வு இந்தாண்டு செப்டம்பர் முதல் அமல்படுத்தப்படும். இதற்கு ஆண்டு ஒன்றிற்கு கூடுதலாக ரூ.13.09 கோடி நிதி ஒதுக்கப்படும்.

மதுபானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட ரூ.1 கோடி நிதி ரூ.3 கோடியாக உயர்த்தப்படும். கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு மறு வாழ்வுக்கு ரூ.5 கோடி மானியம் வழங்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in