

தமிழகம் முழுவதும் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
கூட்டுறவுத் துறை சார்பில் 3,501 நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக் கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலை யில், சென்னையில் 401 கடைகள் உட்பட தமிழகம் முழுவதும் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை முதல்வர் பழனிசாமி இன்று காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார்.
பொருளாதாரத்தை மீட்கத் தேவையான பரிந்துரைகளை வழங்க ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமை யில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை முதல்வரிடம் இன்று காலை 10 மணிக்கு அளிக்கிறது.