

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியரின் உத்தர வின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. இதன்படி, நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ராஜாஜி காய்கறி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது.
மேலும், நகருக்கு வெளியே வையாவூர் மற்றும் பெரியார்நகர் பகுதிகளில் தற்காலிமாக காய்கறி மார்க் கெட் செயல்பட்டு வந்தது. இதனால், வியாபாரிகள் பல் வேறு வகையில் சிரமங்களை சந்தித்து வந்தனர். மேலும், பொதுமக்களும் நீண்ட தூரம் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண் டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரம் நகரில் பெருந்தொற்று குறைந்து வருவதால் ராஜாஜி காய்கறி மார்க் கெட்டை மீண்டும் திறக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன்படி, காய்கறி மார்க்கெட்டை இன்று திறக்க ஆட்சியர் உத்தரவிட்டுள் ளார். இதையடுத்து மார்க் கெட் பகுதியில் தூய்மைப் படுத்தும் பணிகளை நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் பணியாளர்கள் மேற் கொண்டுள்ளனர்.
6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் காய்கறி மார்க்கெட் திறக்கப்படுவதால், கடை களின் மேற்கூரைகள் சீரமைப்பு மற்றும் வண்ணம் பூசி சுத்தப்படும் பணிகளில் வியாபாரிகள் ஈடுபட்டனர். மார்க்கெட் திறக்கப்படுவ தால் வியாபாரிகள் மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளர் கள் மகிழ்ச்சியடைந்துள் ளனர். எனினும், சமூக இடை வெளி மற்றும் நேரக் கட்டுப்பாட்டுடன் மார்க்கெட் திறக்கப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது. இதுவரையில் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் இல்லை.