Published : 10 Sep 2015 09:08 AM
Last Updated : 10 Sep 2015 09:08 AM

நடிகர் சங்க தேர்தல்: வேட்புமனு தாக்கல் அக்.1-ல் தொடங்குகிறது - மனுக்கள் மீது 4-ம் தேதி விசாரணை

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட் பாளர்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி ஈ.பத்மநாபன் தெரிவித் துள்ளார்.

2015 - 2018 ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சென்னை மயிலாப்பூர் செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் அக் டோபர் 18-ம் தேதி நடை பெறும் என்று முன்னாள் நீதிபதி ஈ.பத்மநாபன் நேற்று முன்தினம் தெரிவித்தார். இதை அடுத்து நேற்று வேட்பு மனு தாக்கலுக்கான தேதியை அவர் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உயர் நீதிமன்ற உத்தரவின்படி தயார் செய்த அங்கத்தினர்கள் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யலாம். அக்டோபர் 1-ம் தேதி காலை 11 மணி முதல் 3-ம் தேதி 5 மணி வரை தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வெளியூரில் இருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்கள் நேரில் வந்து வேட்புமனு தாக்கல் செய்ய இயலாவிட்டால் அக்டோபர் 3-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் அலுவலகத்தில் கிடைக்கு மாறு வேட்புமனுக்களை தபால் அல்லது கொரியர் மூலம் அனுப்ப வேண்டும்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும். போட்டியில் இருந்து விலகிக்கொள்ள விரும்புபவர்கள் 7-ம் தேதி மாலை 5 மணிக்கு முன் பாக அலுவலகத்தில் கடிதத்தை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சரத்குமார் அறிக்கை

தேர்தல் தொடர்பாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த 9 ஆண்டுகளாக எனது தலைமையிலான நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை உறுப்பினர்கள் அறிவார்கள். எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் சில தவறான வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். இந்த தேர்தலை தள்ளிப்போட்டு நடத்த விடாமல் செய்ய நினைத்தவர்களுக்கு எதிராக நீதியை நிலைநாட்ட எங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக இந்த தேர்தலை கருதுகிறோம்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x