Published : 21 Sep 2020 07:05 AM
Last Updated : 21 Sep 2020 07:05 AM

ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 291 துப்புரவுத் தொழிலாளர்கள் பணிநீக்கம்

கோப்புப் படம்

சென்னை

சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.கே.மகேந்திரன் வெளி யிட்ட அறிக்கை:

சென்னை மாநகராட்சி பகுதியில் தினமும் சேகரமாகும் 5,800 டன் குப்பைகளை 29,339 தொழிலாளர்கள் அகற்றி வருகின்றனர். இவர்களில் 6,400 பேர் மட்டுமே நிரந்தர தொழிலாளர்கள். 4500-க்கும் மேற்பட்டோர் நாளொன்றுக்கு ரூ.210 ஊதியத்துடன் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலமாக பணி செய்கின்றனர். தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் 9,257 பேரும் மலேரியா தடுப்பு பணியில் 2,858 பேரும் மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.379 ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ஊதிய உயர்வு கோரி செப்டம்பர் 7-ம் தேதி ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். பேச்சுவார்த்தையில் நாளொன் றுக்கு ரூ.12 ஊதிய உயர்வு வழங்கப்படும் என மாநக ராட்சி உறுதி அளித்தது. இதனால் போராட்டமும் தள்ளிவைக்கப் பட்டது. ஆனால் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படவில்லை.

இதனிடையே போராட்டத்தில் பங்கேற்ற சங்க நிர்வாகிகள் பலர் எந்த விசாரணையும் இன்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட னர். சங்க நிர்வாகிகளான தற்காலிக ஊழியர்கள் 291 பேர் பணிநீக்கம் செய்யப்பட் டுள்ளனர். 714 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கொடி சங்கத்தில் இல்லை யென எழுதி கொடுக்குமாறு தொழிலாளர்கள் மிரட்டப்பட்டு கின்றனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

இதைக் கண்டித்து, செப். 23-ம் தேதி ரிப்பன் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x