வாணியம்பாடியில் சிறப்பு ஏற்பாடுகளுடன் கரோனா மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்

வாணியம்பாடி கரோனா சிகிச்சை மையத்தில் நேற்று பல்கலைக்கழக தேர்வு எழுதி மாணவர்.
வாணியம்பாடி கரோனா சிகிச்சை மையத்தில் நேற்று பல்கலைக்கழக தேர்வு எழுதி மாணவர்.
Updated on
1 min read

வாணியம்பாடியில் கரோனா சிகிச்சை மையத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அனு மதிக்கப்பட்ட மாணவர், சிறப்பு ஏற்பாடுகளுடன் நேற்று பல்கலைக்கழக தேர்வு எழுதினார்.

வேலூர் மாவட்டம் சேர்க் காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் கட்டுப் பாட்டில் உள்ள கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த 16-ம் தேதி தொடங்கிய தேர்வு வரும் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள கரோனா சிகிச்சை மையத் தில் வாணியம்பாடி பஷிராபாத் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வரும் அவருக்கு நேற்று இன்டஸ்ட்டிரியல் ரிஜிஸ்ட்ரேஷன் என்ற தேர்வு நடைபெற்றது.

கரோனா சிகிச்சை மையத்தில் இருந்ததால் மாணவரின் கோரிக் கையை ஏற்று தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையிலான குழுவினர் பாதுகாப்பு உடையணிந்த செவி லியரின் மேற்பார்வையில் மாணவர் தேர்வு எழுதினார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

வாணியம்பாடி நகராட்சியில் பணிபுரிந்து வரும் பணியாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.

நகராட்சி பணியாளருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால், அவர் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in