

தமிழகத்தில் ரூ.14.89 கோடியில் புதிதாக 32 நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகள்:
கடந்த 4 ஆண்டுகளில் ரூ.134 கோடியில் 170 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் மதுரையில் 3, கோவை யில் 2, மணப்பாறை, அருப்புக் கோட்டை, திருமங்கலம், லால் குடி, கீரனூர், ஓமலூர், பரமத்தி, ஆண்டிப்பட்டியில் தலா ஒன்று என 13 மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களும், வாடிப்பட்டி, ஆண்டிப்பட்டி, ஓமலூர், கீரனூர், கும்பகோணம், பெரம்பலூர், தாம்பரம், ஆலந்தூர், பத்மநாப புரத்தில் தலா ஒன்று என 9 குற்றவியல் நடுவர் நீதிமன் றங்களும் ரூ.9.57 கோடியில் அமைக்கப்படும்.
பெண்களுக்கு எதிரான குற் றங்களை விசாரிக்க ரூ.16.60 கோடியில் 22 மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட் டுள்ளன. தேனி, பரமக்குடி, ஆரணி, நாகர்கோவில், விழுப்புரம், பழநி, மேட்டூர், கும்பகோணம், வேலூர், காஞ்சிபுரத்தில் மாவட்ட நீதிபதி பதவி தரத்தில் 10 விரைவு நீதிமன்றங்கள் ரூ.5.32 கோடியில் அமைக்கப்படும்.
5 ஆர்டீஓ அலுவலகங்கள்
ஸ்ரீபெரும்புதூர், மேட்டூர், பழநி, சிவகாசி, கோவில்பட்டியில் உள்ள போக்குவரத்து பகுதி அலுவலகங்கள் ரூ.3.73 கோடியில் வட்டாரப் போக்குவரத்து அலு வலகங்களாக தரம் உயர்த்தப் படும். நத்தம், ஆலங்குடி, திருக்கழுக்குன்றத்தில் ரூ.2.12 கோடியில் போக்குவரத்து பகுதி அலுவலகங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.