

ஊரகப் பகுதி மாணவர்களுக் கான திறனாய்வுத் தேர்வு தமிழகம் முழுவதும் வரும் 27-ம் தேதி நடக்க உள்ளது. இதில் 48 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.
கிராமப்புற பகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி கள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர் களின் (சென்னை மாவட்டம் நீங்கலாக) கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (டிரஸ்ட்) என்ற சிறப்புத் தேர்வு நடத்தப்படுகிறது. 9-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத தகுதியுடையவர்கள். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இத்தேர்வு மூலம் (சென்னை தவிர) மாவட்டத்துக்கு 50 மாணவர் கள், 50 மாணவிகள் வீதம் மொத் தம் 3,100 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வில் 48 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனர். இத்தகவலை அரசுத் தேர்வுகள் இயக்குநர் (பொறுப்பு) தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.