

தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் இடியு டன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 223.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கமாக பெய்யும் மழையை விட 9 சதவீதம் குறைவாகும்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் முழு வதும் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.