மேட்டூர் அணை நீர் மட்டம் 90 அடியாக சரிவு

மேட்டூர் அணை: பிரதிநிதித்துவப் படம்
மேட்டூர் அணை: பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்து விடப்பட்டு வருவதால், அணையின் நீர் மட்டம் 90.35 அடியாகச் சரிந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வந்த நிலையில், காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது, மழை அளவு குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

நேற்று (செப். 18) மேட்டூர் அணைக்கு 13 ஆயிரத்து 1 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (செப். 19) காலை 12 ஆயிரத்து 79 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர் மட்டம் நேற்று 91.35 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 90.35 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும், பாசனத்துக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், தொடர்ந்து அணையின் நீர் மட்டம் சரிந்து வருகிறது. மேட்டூர் அணையில் மொத்த நீர் இருப்பு 53.61 டிஎம்சியாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in