

மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான (மொத்தம் 16) விண்ணப்பங்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் இருக்கும்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:
“மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு கீழ்கண்ட பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடங்கள்
பதவியின் பெயர்:-
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் - காலி பணியிடங்கள் எண்ணிக்கை 16.
தொகுப்பூதியம் ரூ.33,250/- ஒரு மாதத்திற்கு.
பணி நிரப்பப்படும் இடம்: -
தமிழ்நாட்டின் ஏதேனும் ஒரு மாவட்டம்.
அடிப்படை கல்வித் தகுதி:-
இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (10+2+3 முறையில்) (சமூகப்பணி / சமூகவியல் / உளவியல் / குற்றவியல் / குழந்தை வளர்ச்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில்)
முன்னுரிமை
சமூகப்பணி / சமூகவியல் / உளவியல் / குற்றவியல் / குழந்தை வளர்ச்சி ஆகியவற்றில் முதுகலை பட்டம் மற்றும் அடிப்படை கணினித் திறன் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பணி அனுபவம்:-
சமூகப்பணி / குழந்தை நலம் /சமூக நலம் / குழந்தை தொழிலாளர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் 5 வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.
வயது வரம்பு:-
01.09.2020 அன்றைய தினத்தன்று 26 வயதிற்கு மேலாகவும் 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்
பணி ஓய்வு பெற்றோர்:-
கள அளவில் சமூகப்பணி / குழந்தை நலம் / சமூக நலம் / குழந்தை தொழிலாளர் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் புதிய திட்டங்கள் வகுப்பதில் பங்குபெற்ற அரசிதழ் பதிவுப் பெற்ற அலுவலர் நிலையில் அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம். (62 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்)
மேலும், உரிய விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http//www.tn.gov.in/job_opportunity - லிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட பதவிகளுக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் உரிய சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் (Pass port size) அக்டோபர் 09/2020 மாலை 5.30-க்குள் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்”.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:
ஆணையர்/செயலாளர்,
மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்,
சமூகப் பாதுகாப்புத்துறை,
எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
கெல்லீஸ், சென்னை-600 010. தொலை பேசி: 044 – 26421358.