Published : 19 Sep 2020 02:05 PM
Last Updated : 19 Sep 2020 02:05 PM

கம்பம் நகரில் ஆதரவற்று சுற்றித்திரியும் ஆங்கிலம், மலையாளம் பேசும் மனநோயாளிகள்

கேரளா மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து மனநலம் பாதிக்கப் பட்டவர்களை குடும்பத்தினர் கம்பத்தில் விட்டுச் செல்லும் நிலை அதிகரித்துள்ளது. சிறப்பாக வாழ்ந்த இவர்கள் துர்நாற்றம், அழுகிய உணவு என்று பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டு ள்ளனர்.

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் கம்பம் அமைந்துள்ளது. இங்கு தெரு வோரம் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வரு கிறது. இவர்களில் பெரும்பாலானோர் வெளியூர்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் அழைத்து வந்து நிராதரவாக விடப்பட்டவர்கள்.

கம்பத்தின் முக்கியச் சாலைகளில் சுற்றித்திரியும் இவர்கள் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளில் கிடக்கும் அழுகிய உணவுகளை எடுத்து உண் கின்றனர். பாலத்துக்கு அடியில், சுடு காடு, ஆற்றங்கரையோரம் என்று ஒதுக் குப்புறமான இடங்களில் இவர்கள் தங்குகின்றனர். அழுக்கான உடை, சீரற்ற தலை முடியுடன், பல உடைகளை அணிந்தவாறு இவர்கள் சாலைகளில் வலம் வருகின்றனர். ஆங்கிலம், மலையாளத்தில் சரளமாக பேசும் இவர்கள், சாலையோரக் கடைகள் மற்றும் பொதுமக்கள் கொடுப்பதை அவ்வளவு எளிதில் வாங்குவதில்லை.

அவர்கள் தனி சிந்தனையில் ஆழ்ந்து கிடப்பதால் வெளியுலக நடைமுறைகள் அவர்களது கவனத்தைத் திருப்புவதில்லை. சாக்கடையில் குளிப்பது, பின்பு அதே நீரை தட்டில் ஏந்திக் குடிப்பது, குப்பை மற்றும் தகிக்கும் தார்ச் சாலையில் பல மணி நேரம் படுத்திருப்பது என்று இவர்களின் பொழுதுகள் கழிகின்றன. துர்நாற்றமும், மாறுபாடான செயல்பாடுக ளாலும் இவர்களைப் பார்க்கும் பலரும் விலகிச் செல்கின்றனர். கடந்த காலங்களில் குடும்ப உறவு களுடன் பொருளாதாரத் திலும், சமுதாயத்திலும் நல்ல நிலையில் இருந்து வந்த இவர்களுக்குப் போதை, விபத்து, நோய் ஆகிய வற்றினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பராமரிக்க மனம் இன்றி குடும்பத்தினர் தெரு ஓரங்களில் விட்டுச் சென்றுள்ளனர்.

இது குறித்து தன்னார்வலர் சோ.பஞ்சு ராஜா கூறியதாவது:

பஞ்சுராஜா

இவர்களுக்கு தினமும் உணவு அளித்து, முடிதிருத்தி வருகிறோம். பலர் நல்ல நிலையில் இருந்து இதுபோன்ற நிலைக்கு வந்துள்ளனர். அதிகம் பேசமாட்டார்கள். கட்டுப் படுத்துவது கடினம். நான் தொடர்ந்து உணவு கொடுத்து வருவதால் முரண்டு பிடிக்காமல் பெற்றுக் கொள்வர். சிலர் பணம்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். அரசு காப்பகம் அமைக்கலாம். அல்லது அதற்கான இடம் கொடுத்தால் இவர்களைப் பராமரிக்க ஏதுவாக இருக்கும். ஆரம்பத்திலேயே பயிற்சி, மருத்துவம் அளித்தால் நல்ல பழக்க வழக்கத்துக்கு இவர்கள் மாற வாய்ப்புள்ளது. ஆத்ம திருப்திக்காக இச்சேவையை செய்து வருகிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x