ஊராட்சிக்கு வருவாய் தரும் வகையில் தமிழகத்தில் முதன்முறையாக ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை பண்ணை: செப்.22-ம் தேதி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

கோகிலா ராஜேந்திரன்
கோகிலா ராஜேந்திரன்
Updated on
2 min read

தமிழகத்தில் முதன்முறையாக ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிக ளில் ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் தோட்டக்கலை பண் ணையை முதல்வர் கே. பழனிசாமி செப். 22-ல் தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் 2019-ல் ஊராட்சிகளில் குறுங்காடுகள் வளர்க்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இத்திட்டத் தால், ஊராட்சிகளில் மரக்கன்றுகள் வளர்ந்து வனச் சோலையாகக் காட்சி அளிக்கிறது. இந்நிலையில் தமிழகத்திலேயே முதன்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங் கிணைந்த பண்ணைய முறை யில் தோட்டக்கலை பண்ணை அமைக்கும் திட்டம் உருவாக் கப்பட்டுள்ளது.

தோட்டக்கலை பண்ணை

மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் தலா ஒன்று வீதம் 11 தோட்டக்கலைப் பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. செப்.22-ல் ராமநாதபுரம் வரும் முதல்வர் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இதன் பின்னர் தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இங்கு காய்கறித் தோட்டம், கறவை மாடு, வெள்ளாடு, கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மூலிகைச் செடிகள், பண்ணைக்குட்டை, மீன் வளர்ப்பு, காய்கறி கழிவுகள் மூலம் இயற்கை உரம், மண்புழு உரம் தயாரிப்பு, கோமியம் மூலம் பினாயில், சாணி மூலம் பஞ்ச கவ்யம் தயாரிப்பு என ஒருங்கிணைந்த பண்ணையமாக அமைகிறது. காய்கறி, கீரைகள் விற்பனை செய்யப்பட்டு அப்பணத்தை ஊராட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட உள்ளது. கறவை மாடு, வெள்ளாடு, கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு ஆகியவை மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதில் வரும் வருவாய் மூலம் மகளிர் குழுவினர் மேம்பாடு அடைவர்.

இத்திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்புத் திட்டம் (நூறு நாள் வேலைத்திட்டம்) மூலம் செயல் படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஒரு தோட்டக்கலைப் பண்ணைக்கு தோட்டம், கூரைகள், கழிப்பறை, பண்ணைக்குட்டை உள்ளிட்டவற்றுக்காக ரூ. 20 லட்சம் செலவிடப்படுகிறது. பண் ணையைப் பராமரிக்க தினமும் நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகள் வேலை செய்கின்றனர். இத்திட்டம் வெற்றியடைந்தால், ஒவ்வொரு ஊராட்சிக்கும் மாதம் ரூ.80,000 முதல் ரூ. 1,00,000 வரை வருமானம் கிடைக்கும் என ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் தாதனேந்தல், வாலாந்தரவை சக்கரக்கோட்டை, தேரிருவேலி, நெல்மடூர், போகலூர், பகை வென்றி, முஷ்டக்குறிச்சி, மூக்கையூர், என்.எம்.மங்கலம், கோவிந்தமங்கலம் ஆகிய 11 ஊராட்சிகளில் தற்போது தோட் டக்கலை பண்ணைகள் அமைக்கப் பட்டுள்ளன.

வாலாந்தரவை மற்றும் தாதனேந்தல் ஊராட்சியில் தோட்டக்கலை பண்ணையை அமைத்து சிறப்பாகப் பராமரித்து வருகின்றனர். தாதனேந்தல் ஊராட்சி பண்ணை ராமநாதபுரத்தி லிருந்து தூத்துக்குடி செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. இத்தோட்டத்தை வரும் 22-ம் தேதி ராமநாதபுரம் வந்துவிட்டு தூத்துக்குடி செல்லும் வழியில் முதல்வர் பார்வையிட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

3 ஏக்கரில் குறுங்காடு

திருப்புல்லாணி ஒன்றியம், தாதனேந்தல் ஊராட்சித் தலைவர் கோகிலா ராஜேந்திரன் கூறியதாவது: எங்கள் ஊராட்சியில் 3 ஏக்கரில் குறுங்காடு அமைத்துள்ளோம். இதில் பழ மரங்கள், பயன்தரும் மரங்கள், நிழல் தரும் மரங்களை உருவாக்கி யுள்ளோம். மேலும் இரண்டரை ஏக்கரில் தோட்டக் கலைப் பண்ணை அமைத் துள்ளோம்.

இங்கு ரசாயன உரமின்றி இயற்கை முறையில் காய்கறி, கீரைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். ஆடு, மாடு, நாட்டுக்கோழி வளர்ப்பின் மூலம் மகளிர் குழுவினர் வருவாய் ஈட்ட அரசு வழிவகை செய்துள்ளது. இதன் மூலம் ஊராட்சி மக்களும், மகளிர் குழுவினரும் பயன் அடைவர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in