Published : 19 Sep 2020 01:15 PM
Last Updated : 19 Sep 2020 01:15 PM

சூழலியல் மாற்றங்களால் தனுஷ்கோடி கடலில் கரை ஒதுங்கிய பட்டன் சொறி மீன்கள்

தனுஷ்கோடி கடலில் கரை ஒதுங்கிய பட்டன் சொறி மீன்கள். (உள்படம்) பொத்தான் அளவில் உள்ள ஊதா சொறி மீன்.

ராமேசுவரம்

தனுஷ்கோடி கடற்கரையில் நேற்று ஆயிரக்கணக்கான ஊதா பட்டன் சொறி மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின.

சொறி மீன்கள் குழியுடலிகள் இனத்தைச் சார்ந்தவை. ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. கடல் உயிரினங்களிலேயே மிகவும் அழகானதும், ஆபத்தானவையுமான சொறி மீன்களின் நச்சுத்தன்மை வாந்தி, மயக்கம், மார்புவலியை உருவாக்கி மரணத்தை ஏற்படுத்தும். இதனால், வலையில் சிக்கும் சொறி மீன்களைக் கையில் படாமல் மீண்டும் கடலிலேயே மீனவர்கள் விட்டுவிடுவார்கள்.

இந்நிலையில், நேற்று தனுஷ்கோடியில் சுமார் 2 கி.மீ பரப்பில் சொறி மீன்கள் ஆயிரக்கணக்கில் இறந்த நிலையில் கரை ஒதுங்கின.

இது குறித்து மரைக்காயர் பட்டினம் மத்திய மீன் ஆராய்ச்சித் துறை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், கடலில் ஏற்படும் சூழலியல் மாற்றங்களும், மனிதர் களினால் கடலில் கலக்கக்கூடிய கழிவுகளாலும் சொறி மீன்கள் அதிக எண்ணிக்கையில் கரை ஒதுங்குவது உலகளவில் அதிகரித்து வருகிறது. உயிருடன் உள்ள பட்டன் சொறி மீன்களை வெறும் கைகளில் தொடுவது அலர்ஜியை உண்டாக்கும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x