

தமிழகத்தில் 3-வது அணிக்கு வாய்ப்பில்லை என்றும்,சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக விடம் பாஜக அதிக தொகுதிகளை கேட்க வாய்ப்புள்ளதாகவும் அக்கட்சியின் தென் மண்டலப் பொறுப்பாளர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
தூத்துக்குடியில் பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.எம்.பால்ராஜ் தலைமை வகித்தார். கட்சியின் தென் மண்டல பொறுப் பாளர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் திமுக முன்னாள் மாவட்ட கலை இலக்கிய அணிச்செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 200 பேர் பாஜகவில் இணைந் தனர். அவர்களுக்கு பாஜக உறுப்பினர் அட்டையை நயினார் நாகேந்திரன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவை தேர்த லில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. தமிழகத்தைப் பொருத்த வரை பாஜக தமிழுக்குத்தான் முக்கியத்துவம் வழங்கி வருகிறது. அதற்காக இந்தியை வெறுக்கவோ, எதிர்க் கவோ இல்லை. இதை வைத்து திமுக வினர் அரசியல் செய் கின்றனர்.
கட்சித் தலைமை அறி வித்தால் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி யில் போட்டியிடுவேன். ஏற்கெனவே முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அங்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதி என்பதால் மீண்டும் அவர் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
தற்போது நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் தொடருகிறோம். அதனால் அதிகப் படியான தொகுதிகளை கேட்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 3-வது அணிக்கு வாய்ப்பில்லை என்றார்.