பண பலத்தை நம்பி தேர்தலை சந்திக்கும் அதிமுக: தேனியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு குற்றச்சாட்டு

பண பலத்தை நம்பி தேர்தலை சந்திக்கும் அதிமுக: தேனியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு குற்றச்சாட்டு
Updated on
1 min read

பண பலத்தை நம்பி தேர்தலைச் சந்திக்க அதிமுக திட்டமிட்டுள்ளது என்று திமுக முதன்மைச் செய லாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.

தேனியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. மாவட்ட அமைப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது: அதிமுக பண பலத்தை நம்பி உள்ளது. வரும் தேர்தலில் மக்களை விலைக்கு வாங்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

2021-ல் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும். அதற்காக திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ மூக்கையா, முன்னாள் எம்.பி கம்பம் செல்வேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் நிறைவடைந்த நிலையில், போடி முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன் மீது திமுக வினர் சிலர் புகார் தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு தகராறில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் இருதரப்பையும் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in