

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.
சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியில் சஞ்சய் பிரதீப் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது.
மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கும் இந்தப் பட்டாசு ஆலையில் 12 அறைகளில் பல்வேறு விதமான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டனர். மருந்து கலவை செய்யப்பட்ட தரைச் சக்கரம் மற்றும் வான வெடிகளை உணர்த்துவதற்காக காய வைத்த போது உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின.
திறந்தவெளியில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து காயமின்றி தப்பினர்.
தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.