

வழக்கறிஞர்கள் அண்மை யில் நடத்திய போராட்டத்தால் எழுந்துள்ள பிரச்சினை குறித்தும், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது பற்றியும் முக்கிய முடிவெடுப்பதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அவசர பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் அவசரப் பொதுக் குழுக்கூட்டம் அதன் தலைவர் டி.செல்வம் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு பார் கவுன்சில் கூட்டரங்கில் நடக் கிறது. இந்த கூட்டத்தில், ஹெல் மெட் உத்தரவைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறி ஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து மதுரையில் மதுரை வழக்கறி ஞர்கள் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தின்போது ஹெல் மெட்டை உடைத்தது, தீ வைத்து எரித்தது தொடர்பாக வழக்கறி ஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை காவல்துறை ஆணை யர் பார் கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அத்துடன் மதுரை வழக்கறிஞர் சங்க செய லாளர் ஏ.கே.ராமசாமி உள்ளிட்ட 15 பேர் மீதான முதல் தகவல் அறிக்கையையும் சேர்த்து அனுப்பி யுள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிமன்ற அறைக்குள் அமர்ந்து போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பார் கவுன்சிலுக்கு உயர் நீதி மன்ற தலைமைப் பதிவாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்து டனும் மதுரை வழக்கறிஞர்கள் மீதான முதல் தகவல் அறிக்கை யையும் சேர்த்து அனுப்பப் பட்டுள்ளது. தலைமை நீதிபதி நீதி மன்ற அறைக்குள் அமர்ந்து உள்ளி ருப்பு போராட்டம் நடத்தியதுபோது அங்கிருந்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலனும், போராட்டம் நடத்திய வழக்கறி ஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பார் கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நீதிபதி கர்ணன் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசார ணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அச்சத்துடன் பணியாற்றும் சூழல், போராட்டம் நடத்தியவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள்தானா என் றெல்லாம் கடுமையாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி அகில் இந்திய பார் கவுன்சில் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு மெயில் அனுப்பி யுள்ளது.
மேலும், மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மற்றும் செய லாளர் ஏ.கே.ராமசாமி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசார ணையின்போது, ஏ.கே.ராமசாமி திவாலானவர் என்று சார்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்த தகவல் பார் கவுன்சிலுக்கு வந்துள்ளதா, அதன்மீது பார் கவுன்சில் எடுத்த நடவடிக்கை என்னவென்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த நிலையில், ஏ.கே.ராமசாமி திவா லானவர் என்று சார்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல் பார் கவுன்சிலுக்கு வந்துள்ளது. அதனால் இப்பிரச்சினை தொடர் பாக இன்று நடைபெறும் பார் கவுன்சில் அவசர பொதுக் குழுக் கூட்டத்தில் விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.