

கலிங்கப்பட்டியில் மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக் கப்பட்டுள்ளது.
மதிமுக செய்தித் தொடர்பாளர் கோ.நன்மாறன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியில் இன்று (22-ம் தேதி) நடக்கிறது. இதற்கு மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை வகிக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறுவது தொடர்பாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.