விபத்தின்றி பணிபுரியும் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு ரொக்கப் பரிசு அதிகரிப்பு

விபத்தின்றி பணிபுரியும் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு ரொக்கப் பரிசு அதிகரிப்பு
Updated on
1 min read

விபத்தின்றி பணிபுரியும் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் களுக்கு வழங்கப்பட்டு வரும் ரொக்க பரிசுத் தொகை உயர்த்தப்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசிய தாவது:

எரிபொருட்களின் விலை பலமுறை உயர்ந்தபோதிலும் நாட்டி லேயே மிகக் குறைந்த கட்டணத்தில் பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில்தான் ஒரு கி.மீ.க்கு 42 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற மாநிலங் களில் கட்டணம் அதிகம். கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 5,094 புதிய பேருந்துகள் இயக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஓராண்டில் விபத்தின்றி பணி புரிந்த ஓட்டுநர்களுக்கு வழங்கப் பட்டு வந்த ரொக்கப் பரிசு ரூ.1000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படுகிறது. 5 ஆண்டுகள் விபத்தின்றி பணிபுரிந்தால் ரூ.5 ஆயிரமும், 10 ஆண்டு கள் விபத்தின்றி பணிபுரிந்தால் ரூ.10 ஆயிரமும் ரொக்கப் பரிசாக இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்.

மேலும், ஏற்கெனவே 15, 20, 25 ஆண்டுகள் விபத்தின்றி பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு வழங் கப்பட்டு வரும் ரொக்கப் பரிசு களும் ஆண்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் உயர்த்தி வழங்கப் படும்.

அரசு போக்குவரத்து கழகங் களில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கான உரிமம் புதுப்பிப்பு கட்டணம் திரும்ப வழங்கப்படும்.

ஈரோடு மாவட்டம் பெருந் துறையில் உள்ள சாலை போக்கு வரத்து நிறுவனத்தின் மருத் துவக் கல்லூரி மற்றும் மருத் துவமனையை மேம்படுத்த ரூ.3.16 கோடி செலவில் புதிய மருத்துவக் கருவிகள் வாங்கப்படும். ஈரோட் டில் உள்ள சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்ப பொறியியல் கல்லூரிக்கு கணினி உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் ரூ.1.79 கோடியில் வாங்கப்படும்.

சென்னை வடகிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ரூ.2 கோடி செலவில் ஆர்.கே.நகரில் சொந்தக் கட்டிடம் கட்டப்படும். 81 வட்டார போக்குவரத்து அலுவல கங்களுக்கு ஆவணங்களை பதிவு செய்ய ரூ.1.44 கோடியில் அதிநவீன ஸ்கேனர் வழங்கப்படும். வட்டார போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கு ரூ.47.19 லட்சம் செலவில் யுபிஎஸ் சாதனம் வழங்கப்படும்.

கரூர் மாவட்டம் நன்மங்கலம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆகிய புதிய பகுதி அலுவலகங்களுக்கு ரூ.33.13 லட்சம் செலவில் 5 ஜீப்புகள் வழங்கப்படும். போக்குவரத்து ஆணையர் அலுவலகம் மற்றும் சரக அலுவலகங்களுக்கு ரூ.15.86 லட்சம் செலவில் ஸ்கேனர் வசதி கொண்ட ஜெராக்ஸ் இயந்திரங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in