Published : 19 Sep 2020 07:47 AM
Last Updated : 19 Sep 2020 07:47 AM

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தரிசன நேரம் நீட்டிப்பு: இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி தகவல்

சென்னை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம்செய்யும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அதிக அளவில் கூட்டம் வரக்கூடும் என்பதால் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் பெருமாளுக்கு விசேஷமான நாள் என்பதால் தரிசனம் செய்யும் நேரத்தை நீட்டித்துள்ளோம்.

இதன்படி, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். மேலும், இரவு 8 மணிக்குள் கோயிலுக்குள் இருக்கும் பக்தர்கள் ஒரு மணி நேரம் கூடுதலாக இரவு 9 மணி வரை தரிசனம் செய்யலாம். இன்று முதல், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x